SRH வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய அஜித் குமார்.!

Ajithkumar - Natarajan Birthday

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரும் SRH வீரருமான நடராஜன் தங்கராசுவின் பிறந்தநாளை நடிகர் அஜித் குமார் கொண்டாடினார்.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Ajithkumar - Natarajan Birthday 3
Ajithkumar – Natarajan Birthday [File Image]
இதனையொட்டி நேற்று இரவு நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajithkumar - Natarajan Birthday
Ajithkumar – Natarajan Birthday [File Image]
தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் SRH அணியில் இருக்கும் நடராஜன், இன்று (ஏப்ரல் 4ஆம் தேதி) நள்ளிரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்பொழுது, நடிகர் அஜித்தும் இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உள்ளார்.

Ajithkumar - Natarajan Birthday 3
Ajithkumar – Natarajan Birthday [File Image]
இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் நடராஜனின் பிறந்தநாளில் எடுக்கப்பட்டவை என கூறப்பட்டாலும், அந்த புகைப்படங்களை நடராஜனோ, அஜித்தின் விளம்பரதாரரோ பகிரவில்லை. அஜித்தின் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்