Ajith Kumar - Vishnu Vishal [file image]
Aamir Khan:மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே பேரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவித்தனர். நேற்று காரப்பாக்கத்தில் வீடுகளில் தத்தளித்த நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டனர்.
விஷ்ணு விஷால் சென்னையில் வசிக்கும் நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சமீபத்தில் சென்னைக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. அவரது தாயார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் தனது X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து இந்த துரித நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!
தற்பொழுது, அஜித் அவர்களின் நிலைமையைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், அவர்களைச் சந்தித்து உதவ ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆம், இது குறித்தும் விஷ்ணு விஷால் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, “ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்கள் வில்லாவில் உள்ள சக உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகள் செய்ய உதவினார்” என்று குறிப்பிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தற்பொழுது, இந்த செயலை கண்டு அவரது ரசிகர்களை வெகுவாக பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…