மீண்டும் தன் பழைய ஃபார்முக்கு வந்த அஜித்.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ…
நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் கூட, அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானால் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் க்ளீன் சேவ் செய்து ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தாடி மீசை எடுத்து, துணிவு லுக்கில் இருந்து வெளியே வந்த அஜித் தலையில் கலர் டை அடித்துள்ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சற்று ஷாக்காகி இருக்கிறார்கள்.
#AjithKumar ‘s Latest Snap #Thunivu | #AK62 |#ThunivuPongal2023 pic.twitter.com/7C0vSzRKri
— CineBloopers (@CineBloopers) November 30, 2022
துணிவு படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அஜித் தனது குடும்பத்துடன் லண்டனிலில் நேரத்தை செலவழித்து வருகிறார். மேலும் அஜித் நடித்துமுடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
Ak With Family ????????????????????????#AjithKumar | #AK | #Thunivu | #ThunivuPongal | #THUNIVURampageStarts | #AK62 pic.twitter.com/UMYyHxE7lU
— CineBloopers (@CineBloopers) December 1, 2022
மேலும், அஜித்தின் அடுத்ததாக படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.