லியோ திரைப்படத்தில் இணைந்த அஜித் பட நடிகை.! யார் தெரியுமா..?

Default Image

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லியோ -LEO

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க , படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

Bloody Sweet
Bloody Sweet [Image Source: Twitter ]

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

லியோ படத்தில் நடிக்கும் பிரபலங்கள்.? 

LEO CAST
LEO CAST [Image Source : Twitter]

லியோ திரைப்படத்தில்  த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை 

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை அபிராமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக லியோ படத்தில் இணைந்துள்ளார்.

அவர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், அபிராமி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்