அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்! என்ன செய்திருக்காங்கனு பாருங்களேன்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பு திறமையால், இவருக்குகென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள், வடசென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு தினமும் ஒரு லாரி குடிநீர் கொண்டு சென்று இலவசமாக வழங்கி வருகினறனர். அஜித் ரசிகர்களின் இந்த செயலை பாராட்டி, மக்கள் அனைவரும் அஜித்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க #Thala #Ajith ரசிகர்கள் சார்பாக வட சென்னை மக்களுக்கு தினமும் இலவச குடிநீர் வழங்கப்படுகிறது.
Kudos to "வீர சென்னை தல அஜித் Welfare Association".@SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/CEpjwJb7jN— AJITH MANIA (@AjithMania) July 7, 2019