Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
நடிகர் அஜித் குமார் இன்று (மே 1 ) தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த கொண்டாட்டத்தின்போது, அவரது பழைய படங்களில் ஒன்றான தீனா மீண்டும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தை காண ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து தீனா படத்தைக் கொண்டாடி சம்பவம் அரங்கேரியுள்ளது.
ஆம், தீனா படம் தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் முதல்காட்சியைக் காண வந்த அஜித் ரசிகர்கள் உற்சாகம் மிகுதியால் தியேட்டரின் உள்ளேயே பட்டாசுகளை கொளுத்தினர்.
இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியான நிலையில், திரையரங்க ஊழியர்களை வந்து நிலைமையை சீர் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், படத்தில் வரும் வத்திக்குச்சி படிக்காதுடா பாடல் திரையில் ஒலித்துக் கொண்டிருந்த போது, ரசிகர்கள் இருக்கையில் இருந்து இறங்கி நடனமாடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், பட்டாசுகளுக்கு தீ வைக்க, தீப்பொறிகள் மற்றும் புகை மூட்டம் அறை முழுவதும் பரவியது தெரிகிறது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…