manickam narayanan ajithkumar gnanavel raja [file image]
ஞானவேல் ராஜா அமீர் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஞானவேல் ராஜா சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும் சமுத்திரகனி சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் போலியான , வருத்தம் தெரிவிப்பதெல்லாம் விஷயமில்லை சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பலரும் ஞானவேல் ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஞானவேல் ராஜா பேசியது தவறு என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஞானவேல் ராஜா எப்பவுமே திமிர் பிடித்த ஒரு நபர் என்று நான் நினைக்கிறேன். அவர் எப்பவுமே அதிகமாக பேசக்கூடிய ஒரு நபர்.
திமிர் என்பது 30 அல்லது 40 வயது வரை இருக்கலாம் அதற்கு மேலே போனால் அவர்களுக்கே தெரிந்து விடும். தயாரிப்பாளராக பல திரைப்படங்களில் ஹிட் கொடுத்து, அதாவது 20 படங்களுக்கு மேல் ஹிட் கொடுத்த பிறகு பிறகு கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். அடக்கமாக இருக்க வேண்டும் ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்றால் சினிமா நம்மை வெறுத்து விடும் தரமும் குறைந்து விடும்.
அமீர் விவகாரத்தில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டது வெறும் வார்த்தையால் தான் கேட்டதாக நான் நினைக்கிறேன். அதனை சசிகுமாரும் சொன்னார். அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை வருத்தம் தெரிவிப்பதை ஏதோ கடமைக்கு கேட்டது போல் தான் இருந்தது. ஞானவேல் ராஜா போன்ற ஆட்கள் தன் கைக்குள் பெரிய பெரிய ஆட்கள் இருப்பதால் திமிரில் ஆடுகிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஹீரோ சொன்னால் மட்டும்தான் தெரிய வரும்.
அஜித் மனுஷனே இல்லை! பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்!
ஆனால், இந்த விவகாரத்தில் அவருடைய பெயர் எதுவும் அடிப்படவில்லை என்பதால் தான் இதனால் அமைதியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை நன்றி என்பது கிடையவே கிடையாது. நான் பல இடத்தில் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறேன். அஜித்தே பணம் விஷயத்தில் ஏமாற்றும்போது ஞானவேல் ராஜா ஏமாற்ற மாட்டாரா? எனவும்” மாணிக்கம் நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…