நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்
இந்தநிலையில், அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு நடுவே அஜித், நடிகர் அர்ஜுன், நடிகை ரெஜினா, இயக்குநர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோரை ‘கிளிக்’ செய்துள்ளார்.
அஜித் குமாரின் பிஆர்ஓ, சுரேஷ் சந்திரா தற்போது அஜித் க்ளிக் செய்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதுவரை விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் ஏதும் வெளியாகமல் இருந்து வந்த நிலையில், இது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல், ட்ரோன் இயக்குவது போன்றவற்றில் ஆர்வமுடையவர் என்பது தெரிந்ததே.
அதிலும் இந்த முறை சற்று வித்தியாசமாக விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது போர்ஷன்களை முடித்துவிட்டு, சும்மா இருக்கும் நேரங்களில் சக நடிகர்களுக்கே தெரியாமல், அவர்களை புகைப்படம் பிடித்து அதனை இரவு நேரம் வரும் முன், தான் எடுத்து வைத்த போட்டோக்களை பிரேம் போட்டு அந்த நடிகர்களுக்கு பரிசாக கொடுக்கிறாராம்.
தனுஷ் பெற்றோர்களை அவமானப்படுத்தினாரா ரஜினி.? உண்மையை போட்டுடைத்த பிரபலம்.!
அஜித் சக நடிகர்களை புகைப்படம் எடுப்பது இது முதல் முறையல்ல, சில வருடங்களுக்கு முன்பு தனது ‘வீரம்’ படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் சிவபாலன் மற்றும் ‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது, ஸ்ருதி ஹாசன் மற்றும் கபீர் யோகிபாபு ஆகியோரைக் கிளிக் செய்திருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…