ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுத்த அஜித்! வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனது திறமையான நடிப்பாலும், தனது அன்பான குணத்தாலும் ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே தனக்கென வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் வெளியில் சென்ற போது அவரது ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் ஒரு ரசிகரின் செல்போனை வாங்கி அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,