Ajay Ghosh சினிமாத்துறையில் இருக்கும் பல நடிகர்கள் பெரிய பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு பல சிரமங்களை தங்களுடைய வாழ்வில் சந்தித்து இருப்பார்கள். அவர்கள் பட்ட கஷ்டங்களையும் பேட்டிகளில் கண்கலங்கி கூறுவதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி தான் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் காமெடியாகவும் நடித்த அஜய் கோஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பட்ட கஷ்டங்களை மனம் திறந்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஜய் கோஷ்”ஒரு காலத்தில் என் குடும்பம் வறுமையில் வாடியது. அந்த சமயம் எல்லாம் எனக்கு உடுத்த உடை கூட இருக்காது. நான் யாரிடமாவது ஆடைகளைக் கேட்டு உடுத்துவது வழக்கம். அதைப்போல வெறும் சாதம் மாற்று பச்சை மிளகாய் வற்றல் சாப்பிட்ட நாட்கள் உண்டு. அந்தக் கஷ்டங்களிலிருந்து நான் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டேன்.
நான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்றபோது என் அப்பா மட்டும் தான் கஷ்டப்பட்டார். அதனை இப்போது நினைத்து பார்த்தால் கூட என்னுடைய கண்களில் கண்ணீர் வருகிறது. அந்த சமயம் எல்லாம் எனக்கு வெறும் சாதம் இருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பேன். அதைபோல நான் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருந்ததை சோற்றை அம்மா சாப்பிடுவது வழக்கம். அப்படி இல்லை என்றால் அம்மா பசியோடு தான் இருப்பாங்க.
அதை நினைக்கும் போது கூட என் கண்களில் கண்ணீர் வருகிறது. பல கஷ்டங்களை அனுபவித்தேன். நீங்களே யோசித்து பாருங்கள் இப்படியான கஷ்டங்களை நேரில் பார்த்தால் நமக்குள் எந்த அளவிற்கு வேதனை வரும். அந்த வேதனையில் இருந்து மீண்டு வர முடிவு செய்து கடினமாக உழைத்தேன். இப்போது நல்ல இடத்தில் இருக்கேன். இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும்” எனவும் கண்கலங்கி சற்று எமோஷனலாகவும் அஜய் கோஷ் கூறியுள்ளார்.
அஜய் கோஷ் தமிழ் சினிமாவில் விசாரணை, தப்பு தாண்டா, மாரி 2 , நட்பே துணை , காஞ்சனா 3, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…