இந்தியன் 2-வில் நடிக்கவுள்ளாரா அஜய் தேவ்கன்..??
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் , மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா தொண்ட்கர் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் இணைய போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.