ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வீதம் வேகவேகமாக நடைபெற்று வருகிறதாம்.
காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, கா.பெ.ரணசிங்கம் என தனது நடிப்பு திறனை காட்டும் திரைப்படங்களையும் கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக OTT தளங்களில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் துருவ நட்சத்திரம், டிரைவர் ஜமுனா என ஒரு சில புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இது போக, ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க சென்னை திருவல்லிகேனி பகுதியில் ஒரு குடும்ப விழாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம்.
அந்த கதை மீது அதீத நம்பிக்கையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறாராம். அதனால், பட ஷூட்டிங் நேரம் பற்றி கவலைப்படுவதில்லையாம். ஒரு நாளைக்கு 17 மணி நேரம் ஆனால் கூட இருந்து நடித்து கொடுத்துதான் போகிறாராம். இந்த படம் வெளியானால் தனது மார்க்கெட் நல்ல ஏற்றம் பெரும் என கூறிவருகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…