சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த காதல் வதந்தி தகவல் பரவுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், கைதி படத்தின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமியும் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் நேற்றிலிருந்து தகவல் பரவி வருகிறது.
ஏனென்றால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கடந்த (நேற்று) ஜனவரி 11 அன்று தனது இன்ஸ்டாகிராமில், அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதயத்துடன் படத்தைத் தலைப்பிட்டார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் மற்றும் காதலிக்கிறார்கள் என்று ரசிகர்களிடமிருந்து ஊகங்களுக்கு வழிவகுத்தது. மேலும் சில பிரபலங்களும் அவர்களுடைய பதிவிற்கு கீழ் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஆனால், இது வெறும் வதந்தி தகவல் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ” நண்பர்களே நான் கடைசியாக வெளியிட்ட புகைப்படம் இவ்வளவு பெரிய விஷயமாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டோம். காதல் எல்லாம் ஒண்ணுமில்லை நாங்கள் இருவரும் நண்பர்கள்” என விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு…
சென்னை : கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும்,…
கர்நாடகா: இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது மரங்களை வெடி வைத்து வெட்டியதாக படக்குழுவினர் மீதும் குற்றச்சாட்டு…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில்,…
சிவகங்கை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இன்றும் நாளையும் மக்கள் நல திட்டங்கள்…
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின்…