தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!
Anirudh Ravichander இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் தற்போது ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களுடைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். கடைசியாக ஹிந்தியில் அவருக்கு ஜவான் படம் கூட வெளியாகி இருந்தது.
READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!
இவர் தற்போது கலக்கி கொண்டு இருக்க அவருடைய கடின முயற்சி ஒரு பக்கம் காரணம் என்றாலும் அதற்கு விதை போட்டது தனுஷ் தான் என்று கூறலாம். ஏனென்றால், 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அனிருத்தை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தது தனுஷ் தான். இதனை பல பிரபலங்களும் பேட்டிகளில் கலந்துகொண்ட போது பேசி பார்த்திருப்போம்.
read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!
அந்த வகையில் அனிருத்தின் உறவினரும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனிருத்தை தனுஷ் அறிமுகம் செய்தது பற்றி பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ” அனிருத் தற்போது மிகப்பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துள்ளது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதன்முதலாக அவரை சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முழுக்க முழுக்க தனுஷ் மட்டும் தான் நினைத்தார்.
அனிருத்தின் திறமை அவருக்கு மட்டும் தான் தெரிந்தது. அனிருத் என்னுடைய உறவினர் தான். ஆனால், எனக்கு கூட அவரை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தோணவே இல்லை தனுஷ் அவருடைய திறமையை பார்த்து கண்டிப்பாக இவர் சினிமாவிற்கு வர வேண்டும் இவருக்கு அமோகமான வரவேற்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறி அவருக்கு திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
READ MORE – உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது!
தனுஷ் மட்டும் அப்படி கூறவில்லை என்றால் அனிருத் வெளி நாட்டிற்கு சென்று இருப்பார். ஏனென்றால், அனிருத்தின் பெற்றோர் அனிருத்தை படிக்க வைக்க வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தார்கள். தனுஷ் அவருடைய பெற்றோரை சமாதானம் செய்து பிறகு அனிருத்துக்கு கீபோர்டை வாங்கி கொடுத்து 3 திரைப்படத்திற்கு இசையமைக்க சொன்னார். அனிருத்தின் தற்போது வளர்ச்சிக்கு அவருடைய கடின உழைப்பு தான் காரணம்” எனவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.