முதல் முறையாக டப்பிங் செய்யவுள்ள ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கில போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஏஞ்சலினா ஜோலி தன் இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆஃப் ஈவில். இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதற்காக இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளாராம். இதுதான் முதல் முறையாக இவர் ஒரு படத்திற்கு டப்பிங் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025