சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், சமீப நாட்களாக பாலிவுட் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன்னும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவியது.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், பிரச்சனைகள் அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வளியேறி ஐஸ்வர்யா ராய் தனியாக வசித்து வருவதாகவும் பாலிவுட்டில் பேசப்பட்டு வந்தது. இந்த செய்தி பெரிய அளவில் வைரலானதால் இதை பற்றி ஐஸ்வர்யா ராய் அல்லது அபிஷேக் பச்சன் இருவரில் யாரவது விளக்கம் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டு, தங்களின் திருமண உறவு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தங்கள் மகளை உற்சாகப்படுத்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் என மொத்த குடும்பமும் விழாவில் கலந்து கொண்டனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு விவாகரத்தா? பரபரப்பை கிளப்பிய செய்தி!
பள்ளியின் ஆண்டு விழாவில் ஆராத்யா பச்சன் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு நாடகத்தில் நடிப்பதையும், அவரது தாயார் ஐஸ்வர்யா ராய் அவரை மொபைலில் படம்பிடிப்பதையும் காட்டுகிறது.
இதனால் இவர்களுடைய விவாகரத்து செய்தி முற்றிலும் வதந்தியான ஒரு தகவல் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும், ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…