பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் 2, கிங் ஆஃப் கோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
தக்லைஃப் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிப்பதன் காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு…சினேகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!
96 படத்தின் இயக்குனர் பிரேம் குமாரின் மனைவி ஒரு படத்தை இயக்கவிருந்தார். அந்த திரைப்படத்தில் காரில் சாகசம் செய்யும் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் எனவும், படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது அவர் தக்லைஃப் படத்தில் நடித்து வரும் காரணத்தால் பிரேம் குமாரின் மனைவி இயக்கும் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
மிரட்டல் லுக்கில் தனுஷ்! வெளியானது ‘D50’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
அதைப்போலவே இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகவிருந்த ஒரு படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். ‘தக்லைஃப்’ படத்தின் தேதி பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி அந்த படத்திலும் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி மற்றோரு திரைப்படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க மறுத்துவிட்டாராம்.
மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஐஸ்வர்யா லட்சுமி ‘தக்லைஃப்’ படம் தான் முக்கியம் என யோசிப்பதால் கண்டிப்பாக படத்தில் பொன்னியின் செல்வனை போல பிரபலமாகும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…