தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கதாநாயகியாக மட்டுமின்றி, சோலோ ஹீரோயினாகவும் நடித்து தடம் பதித்து வருகிறார். இவர் சோலோ ஹீரோயினாக நடித்த மாயா, அறம், இமைக்கா நொடிகள் (விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் உடன் நடித்திருந்தனர்) கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இதில் கடைசியாக வெளியான சில படங்களுக்கு அதிகலை காட்சி போட்டு மாஸ் ஹீரோ படம் ரேஞ்சிற்கு படத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
அதேபோல தற்போது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளியாக உள்ள ஐரா படத்திற்கு சென்னை, ஜிகே சினிமாஸில் பெரிய ஹீரோ படங்களுக்கு அதிகாலை 5 மணி ஷோ கொடுப்பது போல இந்த படத்திற்கும் அதே அதிகாலை 5 மணிக்காட்சி திரையிடப்பட உள்ளது. இப்படத்தில் கலையரசன், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து உள்ளனர். சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் சில ப்ரோமோ காட்சிகள், ட்ரைலர் என பலவும் ரசிகர்களை கவரும் படி அமைந்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
DINASUVADU
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…