Ajithkumar ai poster [file image]
நடிகர் அஜித் ரசிகர் ஒருவர் ‘AI’ (Artificial intelligence) செயற்கை நுண்ணறிவு மூலம் அஜித்தை வித்தியாசமான கெட்டப்புகளில் மாற்றி இருக்கும் புகைப்படஙள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானின் நடந்து வருகிரது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அஜித் கடற்கரையில் இருப்பது போலும், அரசியல் தலைவராகவும், ராஜராஜ சோழனாகவும் இருக்கும் கலக்கலான புகைப்படங்கள் ரசிங்கர்களை பெரிதும் கவர்ந்தது.
ஒரு வேலை இருக்குமோ? ராஜராஜ சோழனாக அஜித் குமார்! வைரலாகும் புகைப்படங்கள்…
தற்பொழுது, இயற்கை விவசாயி, பாடி பில்டராக, சாப்பாட்டு ராமனாக, சமையல்காரனாகவும் மாற்றி இருக்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கே தத்ரூபமாக இருக்கிறது. Artificial intelligence (செயற்கை நுண்ணறிவு) மூலம் நாம் நினைத்தது படி, நமது புகைப்படங்களை உருவாக்கி கொள்ளலாம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அஜித்தின் AI புகைப்படங்கள் அதிகமாக வெளியாகி வருவதால், ‘விடாமுயற்சி’ படத்தின் போஸ்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் அஜித் ஒரு வழியாக பைக் பயணத்தை முடித்துவிட்டு, கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை தொடங்கினர்.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதால், அஜித்துக்கு ஜோடியாக மற்றொறு நடிகை ரெஜினா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வழியாக விடாமுயற்சியை கையில் எடுத்த அஜித்!! குந்தவையுடன் வெளிநாடு பறந்த வைரல் புகைப்படங்கள்…
தற்பொழுது, இஸ்ரேல் போர் காரணமாக அஜர்பைஜான் நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…