கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்துள்ள காரணத்தால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது பாகத்தை இயக்கி உள்ளார். இந்த இரண்டாவது பாகம் மிகவும் நீளமாக இருப்பதன் காரணமாக படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் கசிந்தது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்க கூடிய அப்டேட் என்னவென்றால், இந்தியன் 3 படத்திற்கான படபிடிப்பு மற்றும் இந்தியன் 2 படத்தின் இறுதிக்காட்சியில் சில காட்சிகள் எடுக்கப்படவேண்டி இருக்கிறதாம். அதையும் சேர்த்து மொத்தமாக நாளை முதல் படக்குழு எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். சென்னையில் தான் அதற்கான படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 68-வது திரைப்படமான தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான சண்டை காட்சிக்காக படக்குழு தாய்லாந்திற்கு சுற்றுல்லா செல்லவுள்ளதாம். அங்கு சண்டை காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால் படக்குழு இதனை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் படக்குழு அங்கு செல்வார்கள். பிறகு 2 நாட்கள் கழித்து தான் விஜய் அங்கு வருவார். ஏனென்றால், லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதன் காரணமாக 2 நாட்கள் இங்கு இருந்துவிட்டு பிறகு தளபதி 68 படத்தில் நடிக்க தாய்லாந்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. பிறகு அங்கு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்த நிலையில், அதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, படத்திற்கான அடுத்த கட்டபடப்பிடிப்பு தீபாவளி முடிந்து தான் தொடங்கப்படவுள்ளதாம். தீபாவளிக்கு பிறகு முழு வீச்சில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…