நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருடைய படங்கள் சினிமாவில் போட்டியாக இருந்தாலும் அவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள். குறிப்பாக அஜித் தனது படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் தன்னுடைய கையால் பிரியாணி செய்து கொடுத்திருக்கும் தகவலை கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் அவர் விஜய்க்கும் தன்னுடைய கையால் பிரியாணி செய்து கொடுத்திருக்கிறாராம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் தனது 50-வது திரைப்படமான மங்காத்தா படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் அஜித் வெளியாயுதம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு ஒரே பகுதியில் நடந்து வந்த காரணத்தால் விஜய் -அஜித் இருவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்டார்கள்.
இந்த சந்திப்பின் போது மங்காத்தா படப்பிடிப்பில் இருந்த 200 பேர் மற்றும் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த 200 பேர் என மொத்தமாக 400 பேருக்கும் அஜித் தன்னுடைய கையில் அசத்தலாக பிரியாணி செய்து கொடுத்தாராம். அதனை இரண்டு படங்களின் படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவரும் பிரியாணியை சாப்பிட்டு விட்டு நன்றாக இருப்பதாக அஜித்தை பாராட்டினார்களாம்.
அது மட்டுமின்றி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பிறகு அஜித்திற்கு நடிகர் விஜய் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்தாராம். பிரியாணி சமைத்து கொடுத்த இந்த அழகான கைக்கு இந்த வாட்ச் என்று கொடுத்தாராம். பிறகு படப்பிடிப்பில் இருந்தவர்கள் அஜித் விஜய்யுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்களாம். இந்த தகவலை பேட்டி ஒன்றில் பிரேம் ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் மங்காத்தா படத்தின் முதல் பாகத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் தான் முதலில் நடிக்கவிருந்தார். ஆனால், படத்தின் கதையை விஜயிடம் கூறினால் அவர் நடிக்கமாட்டார் என்ற காரணத்தால் விஜயிடம் வெங்கட் பிரபு கூறவில்லை. பிறகு படம் வெளியான பின்பு தான் என்னிடம் சொல்லி இருந்தால் இந்த கதாபாத்திரத்தில் நானே நடித்திருப்பேன் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…