ஆஹா! தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் விஜயின் மகன்!

JasonSanjayDirectorialDebut

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார் . பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை அவர் இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி படித்து வந்தார்.

படித்து முடித்ததும் ஜேசன் சஞ்சய் “trigger” எனும் குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் நடிப்பதன் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாகவும் புதிய தகவல் பரவியது. ஆனால், தற்போது அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ” ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வெற்றி மனநிறைவு நிறைந்த வாழ்க்கை அவருக்கு அமைய வாழ்த்துகிறோம்” என அறிவித்துள்ளார்கள்.

தற்போது நடிகர் விஜய் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய படங்களின் வசூல் பல சாதனைகளை படைத்தது தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக இருக்கிறார் எனவே அவரைப்போலவே அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தொடர்ச்சியாக நல்ல படங்களை இயக்கி வெற்றியை காண வேண்டும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்திற்கான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer