வயசு எல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையாவே தெரியல….பசங்க பட நடிகரின் மனைவி ஓபன் டாக்.!

pasanga Kishore DS

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் அன்புகரசு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கிஷோர். இவர் பசங்க திரைப்படத்தை தொடர்ந்து கோலி சோடா படத்தில் நடித்திருந்தார்.

KishoreShanthiDinakaran
KishoreShanthiDinakaran [Image Source : Twitter/@hemananth_pro]

இந்த நிலையில், 29-வயதான நடிகர் கிஷோர் கடந்த மார்ச் மாதம் கடந்து நீண்ட நாள் காதலியான பிரீத்தி குமார் என்பவரை செய்து கொண்டார். ப்ரீத்தி குமார்  பல சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 32. கடந்த சில ஆண்டுகளாவே கிஷோரும் ப்ரீத்தி இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

Kishore
Kishore [Image Source : Twitter/@Cinephile05]

இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் கிஷோருடன் கலந்து கொண்ட ப்ரீத்தி குமார் “நாங்க இருவரும் இதுவரை வயதை பற்றி பேசியதை இல்லை. எங்களுடைய வீட்டிலும் கூட இதுவரை அவரிடம் வயதை பற்றி கேட்டதே இல்லை.

Kishore DS And Preethi Kumar
Kishore DS And Preethi Kumar [Image Source : Twitter/@OTTGlobaI]

எங்களுக்கு அது எல்லாம் பிரச்சனையே  இல்லை. அதை வைத்து நாங்கள் வாழப்போறது இல்லை. எனக்கு அவரை பிடித்திருக்கிறது. அவருக்கு என்னை பிடித்திருக்கிறது. நாங்கள் இருவரும் எங்களுடைய தந்தைக்காக தான் சீக்கிரமாகவே திருமணம் செய்துகொண்டோம். என்னுடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. எனவே தான் நாங்கள் சீக்கிரமாகவே திருமணம் செய்துகொண்டோம்” என கூறியுள்ளார் நடிகை ப்ரீத்தி குமார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்