கனவு படத்தை கையில் எடுத்த கமல்ஹாசன்.! கை கொடுக்குமா அந்த பெரிய நிறுவனம்.!
மருதநாயகம் சம்பந்தமான விவரங்களை சோனி நிறுவனத்திற்கு கமல் தரப்பு அனுப்பி வைத்துள்ளதாம். அவர்கள் ஒன்று சேர்ந்து தயாரிக்க சம்மதித்தால் மருதநாயகம் மீண்டும் தயாராகும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனது கனவு படம் என்று ஒரு படம் கண்டிப்பாக இருக்கும். அப்படி பலருக்கு பல திரைப்படங்கள் இருக்கின்றன. இயக்குனர் மணிரத்னத்திற்கு பொன்னியின் செல்வன் எனும் கனவு படம் இருந்தது தற்போது அது நனவாகி வருகிறது. அதேபோல உலக நாயகன் கமல்ஹாசன் தனது கனவு திரைப்படமான மருதநாயகத்தை 20 வருடங்களுக்கு முன்பே தயாராக நினைத்தனர்.
ஆனால், இருபது 20 வருடங்களுக்கு முன்பு 50 கோடி ரூபாய் பட்ஜெட் வேண்டும் என ஒதுக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய பட்ஜெட் தருவதற்கு எந்த தயாரிப்பாளரும், தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லை. அப்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டது.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து கமல்ஹாசன் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரித்து வருகிறார். இதனை வைத்து புதுக்கணக்கு போட்டுள்ளார் கமல்ஹாசன்.
சோனி பட நிறுவனம் மிகப்பெரிய பட நிறுவனம் ஆகும். ஆதலால் மருதநாயகம் படத்தின் கதை மற்றும் மற்ற விவரங்களை சோனி நிறுவனத்திற்கு தற்போது கமல்ஹாசன் அனுப்பி வைத்துள்ளாராம். அவர்கள் ஒப்புதல் அளித்து படத்திற்கு நிதி அளிக்க சம்மதித்தால் படத்தை மீண்டும் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.
அப்படி சோனி நிறுவனம் படத்திற்கு நிதி கொடுக்க சம்மதித்தால் மீண்டும் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் உயிர் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதில் அவரை நடிக்க உள்ளாரா அல்லது பட சம்பந்தப்பட்ட விவரங்களை மட்டும் கொடுத்து வேறு யாரேனும் நடிக்க வைத்து இயக்க மட்டும் உள்ளாரா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. இந்த மருதநாயகத்துக்கான தற்போதைய முடிவு சோனி நிறுவனம் கையில் இருக்கிறதாம்.