மீண்டும் களமிறங்கும் சூர்யா – ஜோதிகா…!!!
2003-ம் ஆண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் “காக்க காக்க ” படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்தார்.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ் தாணு இது குறித்து கவுதம் மேனனிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் சூர்யா மற்றும் ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.