pisasu 2 mysskin [File Image]
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகப் பெரிய ஹிட்டான திரைப்படம் ‘பிசாசு ‘. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் இரண்டாவது பாகத்தை இயக்குனர் மிஷ்கின் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து இயக்கியிருக்கிறார்.
இந்த இரண்டாவது பாகத்தில் ஆண்ட்ரியாவுடன் ராஜ்குமார் பிச்சுமணி, நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஷாம்னா காசிம், விஜய் சேதுபதி, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து இருக்கிறார். படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ட்ரைலரில் மிஷ்கின் அனைவரையும் மிரள வைத்தார் என்றே சொல்லலாம்.
இந்த இரண்டாவது பாகம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆக தயாராகிவிட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. கடைசியாக இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு மட்டும் வெளியானது. ஆனால், இன்னும் படத்தின் ரிலீஸ் ஆகவில்லை அதற்கான அப்டேட்டும் வெளியாகவில்லை. எனவே, படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், பிசாசு 2 திரைப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் பார்த்தாராம். பார்த்து முடித்த பிறகு மிரண்டு போய் மிஷ்கினை பாராட்டினாராம். படத்தை பார்த்துவிட்டு என்னையா இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்து வைத்து இருக்கிறாய்? என கேட்டாராம்.
அந்த அளவிற்கு பிசாசு 2 திரைப்படம் அருமையாக இருப்பதால் தான் வெற்றிமாறன் பாராட்டி இருக்கிறார். வெற்றிமாறனே பிசாசு 2 படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. எனவே, விரைவில் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…