ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

Published by
பால முருகன்

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார்.

நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் டிரைலர் அருமையாக இருக்கிறது படத்தை பார்க்க ஆவலுடன் காத்து இருக்கிறோம் என்பது போல பாராட்டி இருந்தார்கள்.

இதனையடுத்து, படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு நடிகர் சிம்பு கவினுக்கு கால் செய்து பாராட்டி பேசினாராம். இந்த தகவலை நடிகர் கவின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஸ்டார் படத்தின் சில காட்சிகளை சிம்பு சார் பார்த்தார். பார்த்ததும் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.

உடனடியாக சிம்பு சார் எனக்கு கால் செய்து பேசினார். கால் செய்து எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறது. கண்டிப்பாக படம் நன்றாக இருக்கும். உங்களுடைய நடிப்பு சரியான மீட்டரில் இருக்கிறது. பார்த்தவுடன் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது என்று கூறினார். இதனை கேட்டவுடன் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. நான் அவரிடம் சொன்னேன் மன்மதன் மற்றும் வானம் ஆகிய படங்களின் எமோஷனலான காட்சிகளை பார்த்து தான் இப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்று கற்றுக்கொன்டேன் என்று சொன்னேன்.

அவரை போல ஒருவரிடம் இருந்து பாராட்டு வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் நடிகர் கவின் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மேலும், ஸ்டார் திரைப்படம் வரும் மே 10-ஆ தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

32 seconds ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

4 hours ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

4 hours ago