கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 190 கோடி வரை வசூல் செய்து இருந்தது.
இந்நிலையில், கல்கி படத்தை பார்த்துவிட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்களும் விமர்சனங்களை தெரிவித்துவிட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
படம் பார்த்துவிட்டு அவர் கூறியிருப்பதாவது ” கல்கி படம் பார்த்தேன். ஆஹா! என்ன ஒரு காவியம்! இயக்குனர் நாக் அஸ்வின் இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார். அஸ்வினிதத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகாபடுகோன் மற்றும் #Kalki2898AD குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கிறேன்” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…