விடுதலையை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சூரி.! இயக்குனர் யார் தெரியுமா..?
காமெடி நடிகராக கலக்கி வரும் சூரி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூரி இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக ஒரு திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அந்த படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கவுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா டேட்டிங் செய்வது உண்மை.! வைரலாகும் வீடியோ…
மேலும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தற்போது மதுரையில் சைலண்டாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.