திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை பாவனா
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “96”.இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் விமர்சன ரீதியாகவும் ,வசூல்ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.
இப்படத்தை இயக்குநர் ப்ரேம் குமார் இயக்கினார். இந்நிலையில் இப்படம் 100 நாள்களை கடந்து மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது “96”திரைப்படத்தை கன்னடத்தில் “99”என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனா நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் கடந்த 16-ம் தேதி வெளியானது.
ட்ரைலர் வெளியான 3 நாள்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் 500k லைக்குகள் பெற்று சாதனை படைத்தது.