அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்கள்…சதீஷ் ஓபன் டாக்..!
நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ” ஓ மை கோஸ்ட்” திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் காமெடி நடிகர் சதீஷ் “சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார். அவர் எதார்த்தமாக சொன்னது சற்று சர்ச்சையை கிளப்பியது.பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையும் படியுங்களேன்- கிழிந்திருக்கும் உடையில் பயங்கர கவர்ச்சி.! வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த மாளவிகா.!
இதனையடுத்து, அந்த சர்ச்சைக்கு பிறகு சதீஷும், தர்ஷா குப்தாவும் சமீபத்தில் ” ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்கள். அதில் பேசிய சதீஷ் ” அந்த ஆடை சர்ச்சைக்கு பிறகு எனக்கும் தர்ஷா குப்தாவுக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.
நாங்கள் இருவருமே ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். இதன் மூலம் நான் அவருடைய தனிப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவருடைய கஷ்டங்களை கஷ்டங்களை புரிந்து கொண்டேன். தர்ஷா குப்தாவின் அம்மாவிடம் நான் பேசினேன். தர்ஷா குப்தா என் மனைவியியை சந்தித்து பேசினார். நங்கள் இந்த சர்ச்சையான விஷயத்தை ஒரு பாசிட்டிவான விஷயமாக தான் பார்க்கிறோம்” என கூறியுள்ளார்.