Sundar C aranmanai 4 [File Image]
Aranmanai 4 : தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அவர் அரண்மனை 4 படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடியான கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனர் சுந்தர் சி. இவர் கடைசியாக இயக்கிய காபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை போல அதற்கு முன்னதாக இயக்கிய அரண்மனை 3 படமும் ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அரண்மனை 1, 2, ஆகிய பாகங்கள் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.
இருப்பினும் அரண்மனை 3 படம் தோல்வியை சந்தித்தது அவருக்கே பெரிய சோகத்தை கொடுத்தது. தோல்வியால் துவண்டு விடாமல் அடுத்ததாக மக்களை மகிழ்விக்க அவர் அரண்மனை 4 படத்தையும் இயக்கி உள்ளார். இந்த 4-வது பாகத்தில் சந்தோஷ் பிரதாப், தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து பாடத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அரண்மனை 4 படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…