கீர்த்தியை பாத்த உடனே ‘லவ்’ வந்துருச்சு! காதல் கதை பற்றி மனம் திறந்த அசோக் செல்வன்!

ashok selvan keerthi pandian

நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் கடந்த செப்டம்பர் 13 -ஆம் தேதி திருநெல்வேலியில் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருமே கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வந்தாலும் கூட பலர் இவர்கள் சந்தோசமாக வாழவேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், திருமணத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஜோடியாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். அப்போது முதல் சந்திப்பை  பற்றி மனம் உருகி அசோக் செல்வன் பேசினார். அதில் பேசிய அவர் ” முதன் முதலாக நாங்கள் இரு தீபாவளி விழாவில் தான் சந்தித்தோம். கீர்த்தி பாண்டியனுடைய தோழி எனக்கும் தோழி. கீர்த்தி பாண்டியன் தான் அந்த விழாவை ஏற்பாடு செய்தார்.

அந்த விழாவிற்கு வரும் அனைவரும் வெட்டி சட்டை, சேலை அணிந்துகொண்டு தான் வரவேண்டும் என்றும் கூறியிருந்தார். விழாவிற்கு சென்று பார்த்தபோது கீர்த்தி பாண்டியன் மட்டும் என்னுடைய கணக்களுக்கு தனியாக தெரிந்தார். வெடி வெடித்து அந்த சமயம் மழை இடியெல்லாம் இடித்தது.

அங்கு பலரும் இருந்தும் எனக்கு கீர்த்தி பாண்டியன் மட்டும் தனியாக தெரிந்தார். அவரை பார்த்தவுடனே எனக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது. அவரை பார்க்கும் போது ஏற்கனவே அவருடன் பழகிய ஒரு உணர்வு இருந்தது. பிறகு என்னுடைய நம்பரை அவரிடம் கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே ஒரு விஷயம் செய்தேன்.

மழை வேகமாக பெய்து கொண்டிருந்த காரணத்தால் வேகமாக வீட்டிற்கு போகவேண்டும் என நினைத்து என்னுடைய போன் தொலைந்துவிட்டது உங்களுடைய போன் கொடுங்கள் ஒரு கால் செய்துவிட்டு தருகிறேன் என கூறி கீர்த்தி போனை வாங்கி எனக்கும் ஒரு கால் செய்துவிட்டு இது தான் என்னுடைய நம்பர் என கூறிவிட்டேன்.

அதற்கு கீர்த்தி பாண்டியன் கோப படவில்லை ஒன்னும் செய்யவே இல்லை. நம்பர் கிடைத்தவுடன் நானாக தான் அவருக்கு மெஜேஸ் செய்தேன். பிறகு ஒரு சில ஆண்டுகள் பேசிக்கொண்டு இருந்தோம் . பின், 2014 ஜூலை மாதத்தில் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம்” என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து பேசிய கீர்த்தி பாண்டியன் ” எனக்கும் அசோக் செல்வனை பிடித்தது அவருடன் இருக்கும் போது நான் பாதுகாப்பாக இருந்ததை போல உணர்ந்தேன். அவர் நடித்த முதல் படமான சூதுகவ்வும் திரைப்படத்தை நான் தான் விநோயோகம் செய்தேன். அந்த சமயத்தில் என்னுடைய அப்பா அந்த வேலையை என்னிடம் கொடுத்தார்.

எனவே, அசோக் செல்வன் நடித்த படங்களை தொடர்ச்சியாக நான் விநோயோகம் செய்தேன். அந்த சமயம் நான் அவரை காதலிக்கவில்லை. சூதுகவ்வும் படம் வெளியான சமயத்தில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம். பிறகு 2014 -ஆண்டு தான் காதலிக்க தொடங்கினோம். எனக்கு கடல் என்றால் பிடிக்கும் என்பதால் ஒரு முறை என்னுடைய பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸ் -ஆக அந்தமான் கடல் கரைக்கு என்னை அழைத்து சென்றார்.

அங்கு சாப்பிட்டு விட்டு என்னிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டார். நானும் அவர் கேட்டவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டேன்” எனவும் நடிகை கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்