Categories: சினிமா

கடைசி நிமிடத்தில் கேப்டன் சொன்னது இதுதான் -பெசன்ட் ரவி எமோஷனல்!

Published by
பால முருகன்

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.  அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி  வருகிறார்கள்.

அந்த வகையில்,  விஜயகாந்துடன் பல படங்களில் நடித்த நடிகர் பெசன்ட் ரவி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பெசன்ட் ரவி ” கேப்டன் இறப்பை பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பலருக்கும் நல்லது செய்த அந்த மனிதர் இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம். அவர் செய்த உதவிகள் அவர் சாப்பாடு போட்ட விஷயம் எல்லாம் கண்ணுக்குள் நினைவுக்கு வருகிறது.

தங்கத்தை உருகினாலும் தங்கம் தங்கம் தான். அந்த மாதிரி மனம் கொண்ட ஒரு மனிதர் தான் விஜயகாந்த். அவர் உடல் நலம் சரியில்லாமல் போகும் சமயத்தில் ஒரு விஷயம் செய்தார். அது என்னவென்றால், அவருடன் படங்களில் நடித்து அவருக்கு பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஒன்றாக அழைத்து கடைசியாக அவர்களுடன் பேசவேண்டும் என்று நினைத்தார். அப்படி தான் என்னையும் ஒரு முறை நேரில் அழைத்தார்.

விஜயகாந்த் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்! ரஜினிகாந்த் பேச்சு! 

அந்த நேரம் தன்னுடைய பணியாற்றிய பிரபலங்கள் அனைவருடன் அமர்ந்து அவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். கூட நடித்தவர்கள் மட்டுமில்லை அவருடன் சண்டைபோட்டவர்கள் அனைவரையுமே அந்த நாள் வர கூறி அவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்திலும் அவருக்கு அனைவரையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எல்லாரும் சொல்கிறார்கள் விஜயகாந்த் உணவு கொடுத்தார் என்று அவர் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே கேப்டனை மறக்க மாட்டேன்” எனவும் பெசன்ட் ரவி உருக்கத்துடன் பேசியுள்ளார்.

Recent Posts

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

8 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

8 hours ago

நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!

டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…

8 hours ago

“நான் 30 நாள்…சிவா 90 நாள் தூங்கவில்லை”..கங்குவா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!!

மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…

9 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (13/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

9 hours ago

“அது தான் கடைசி ஒரு நாள் தொடர்”…ஓய்வை அறிவித்த முகமது நபி!

ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…

10 hours ago