கடைசி நிமிடத்தில் கேப்டன் சொன்னது இதுதான் -பெசன்ட் ரவி எமோஷனல்!
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் நடித்த நடிகர் பெசன்ட் ரவி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பெசன்ட் ரவி ” கேப்டன் இறப்பை பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பலருக்கும் நல்லது செய்த அந்த மனிதர் இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம். அவர் செய்த உதவிகள் அவர் சாப்பாடு போட்ட விஷயம் எல்லாம் கண்ணுக்குள் நினைவுக்கு வருகிறது.
தங்கத்தை உருகினாலும் தங்கம் தங்கம் தான். அந்த மாதிரி மனம் கொண்ட ஒரு மனிதர் தான் விஜயகாந்த். அவர் உடல் நலம் சரியில்லாமல் போகும் சமயத்தில் ஒரு விஷயம் செய்தார். அது என்னவென்றால், அவருடன் படங்களில் நடித்து அவருக்கு பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஒன்றாக அழைத்து கடைசியாக அவர்களுடன் பேசவேண்டும் என்று நினைத்தார். அப்படி தான் என்னையும் ஒரு முறை நேரில் அழைத்தார்.
விஜயகாந்த் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்! ரஜினிகாந்த் பேச்சு!
அந்த நேரம் தன்னுடைய பணியாற்றிய பிரபலங்கள் அனைவருடன் அமர்ந்து அவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். கூட நடித்தவர்கள் மட்டுமில்லை அவருடன் சண்டைபோட்டவர்கள் அனைவரையுமே அந்த நாள் வர கூறி அவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்திலும் அவருக்கு அனைவரையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எல்லாரும் சொல்கிறார்கள் விஜயகாந்த் உணவு கொடுத்தார் என்று அவர் கொடுத்த உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே கேப்டனை மறக்க மாட்டேன்” எனவும் பெசன்ட் ரவி உருக்கத்துடன் பேசியுள்ளார்.