எம்ஜிஆருக்கு அப்புறம் நம்ம தான்! மேடையில் மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இந்த நிலையில், ஒரு வழியாக படத்தின் சிஜி வேலைகள் எல்லாம் முடிந்து படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசரை படக்குழு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது. படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் அயலான் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ” இந்த படம் செய்யும் போது இயக்குனர் என்னிடம் சிவா இந்த மாதிரி ஏலியன் வைத்து எம்ஜிஆர் ஒரு திரைப்படம் ட்ரைப் பண்ணீருக்காங்க அதற்கு அப்புறம் நாம தான் இப்போது செய்கிறோம் என்று. எனவே, தமிழ் சினிமாவில் அத்தனை வருடங்கள் கழித்து இப்போது தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைத்து பெருமை படுகிறேன்.
உடனே யூடியூபில் உள்ளவர்கள் அடுத்த எம்.ஜி.ஆர் சிவகார்த்திகேயன் தான் என்று எழுதாதீங்க என்று கூற அரங்கில் இருந்தவர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கத்தினார்கள். பிறகு சிவகார்த்திகேயன் நானே கன்டென்ட் கொடுத்துட்டேனோ” என கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் , அதனை பார்த்த பலரும் அவரே அவருக்கு கன்டென்ட் கொடுத்துட்டாரு என கலாய்த்து வருகிறார்கள்.
மேலும், இந்த அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 24AM ஸ்டுடியோஸ் மற்றும் பாண்டம் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025