அயலான் கதையை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம்! உண்மையை உடைத்த இயக்குனர்!

ar rahman about ayalaan

இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கி நாம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இயக்குனர் ஆர்.ரவிகுமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

படத்தை 100 கோடி பட்ஜெட்டில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமையாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர்  வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

என்னது குஷ்பு -பிரபு ரகசிய திருமணமா? பரபரப்பை கிளப்பிய பிரபலம்!

ஏற்கனவே, இன்று நேற்று நாளை படத்தில் டைம் ட்ராவல் கதையை வைத்து ஒரு அற்புதமான காதல் படத்தை ஆர்.ரவிகுமார் இந்த அயலான் படத்தில் ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை வைத்து படமாக இயக்கி உள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து சிஜி வேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயத்தை பற்றி ஆர்.ரவிகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது பற்றி பேசிய அவர் ” படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் சொன்னவுடனே அவர் இதனை ஏ.ஆர்.ரஹ்மான் கிட்ட சொல்லுங்க கண்டிப்பாக படம் நன்றாக வரும் என்று சொன்னார்.

ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் வருமா? நச் பதில் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

பிறகு படத்தை பற்றி ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிந்த பிறகு கதை முழுவதையும், கூறினேன். படத்தின் கதையை கேட்டவுடன் அவர் ரொம்ப பெருசா இருக்கே என கேட்டார். அதற்கு நான் ஆமா சார் கொஞ்சம் பெரிய படமாக எடுக்கிறோம் என கூறினேன். பிறகு அவரிடம் இசையில் சில மாற்றங்களை செய்ய சொல்லவே தயக்கமாக இருந்தது.

பிறகு அவரிடமே நான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது ஒரு முன் உதாரணத்துக்காக சில இசையை உங்களிடம் காமித்து அந்த மாதிரி வேணும் என்று கேட்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவரும் காமிங்க இதில் என்ன இருக்கிறது? என்று கேட்டதாகவும் ” ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அயலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்