ar rahman [file image]
A.R.Rahman இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மளை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இன்பமோ, சோகமோ அவருடைய பாடல்களை கேட்டு தான் நமது நேரங்களை கழித்து வருகிறோம்.
சினிமா துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் ஏ.ஆர்ரஹ்மானின் பெரிய ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை கேட்டுவிட்டு பாராட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இயக்கும் இயக்குனர் செல்வராகவன் தற்போது ரஹ்மானை ‘மேஸ்ட்ரோ’ என்று பாராட்டியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள “ஆடுஜீவிதம்” படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக Periyone பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த பாடலை கேட்டு தான் தற்போது இயக்குனர் செல்வராகவன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டியுள்ளார். பாடலை கேட்டுவிட்டு செல்வராகவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அடடா எவ்வளவு அருமையான பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று தான் நாங்கள் சொல்லவேண்டும். நான் மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மானின் மந்திரத்திற்கு சரணடைகிறேன்” என கூறியுள்ளார். இவருடைய பதிவை பார்த்த பலரும் செல்வராகவன் சார் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு படம் பண்ணுங்க என கூறி வருகிறார்கள். இதுவரை பல படங்களை இயக்கி உள்ள செல்வராகவன் ஒரு படத்தில் கூட ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…