பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மாயாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

mayakrishnan bigg boss

விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம்.

மாயா லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மாயாவிற்கு தற்போது ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் மாயா அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் படத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு!

அந்த வகையில், பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரான யானிக் பென் தற்போது தமிழ் சினிமாவில்  இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இவர் இதற்கு முன்பு  சமந்தா நடித்த ‘யசோதா’, சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இவர் தான்  பணியாற்றியுள்ளார்.

எனவே, தற்போது அவர் புதியதாக ஒரு படத்தை இயக்கி அதன்மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கும் அந்த படத்தில் தான் மாயா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான அறிவிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நாளை ஒளிபரப்பாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்