கொஞ்ச படங்களில் ரசிகர் மனதை கொள்ளைகொண்ட பிரியங்கா மோகன்.. அடுத்தடுத்த முரட்டு லைன் அப்…

Priyanka Mohan

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்தது.

இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் ஸ்ரீகரம், நானியின் கேங் லீடர் ஆகிய படங்களிலும், கன்னடத்தில் ஓந்த் கதே ஹெல்லா படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் இவர் டாக்டர்,டான், எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்ததால் தான் மிகவும் பிரபலமானார். எனவே, இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குவிந்து வந்தது. அதிலும் அவர் நடித்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.

இந்நிலையில், அவர் எந்தெந்த படங்களில் நடிக்கிறார் அவருடைய நடிப்பில் என்ன படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதை பற்றி பார்க்கலாம். அதன்படி, பிரியங்கா மோகன் தற்போது தனுஷிற்கு ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரதீப்பிற்கு ‘ரெட் கார்டு’ கொடுத்தது தப்பு! மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஷு!

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இயக்குனர் ராஜேஷ் இயக்கி வரும் ‘பிரதர்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதைப்போல தெலுங்கில் நடிகர் பவான் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஓஜி’ என்ற திரைப்படத்திலும், நானிக்கு ஜோடியாக ‘சரிபோதா சனிவாரம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

கொஞ்சம் படங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் தான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார். ஆனால், தற்போது பிஸியான நடிகையாயாக இருப்பதால் ஒரு படத்தில் நடிக்க 1 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், இன்று (நவம்பர் 20) -ஆம் தேதி நடிகை பிரியங்கா மோகன் தனது 29-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்