Vijayakanth : ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு படத்தில் இருந்து விஜயகாந்த் விலகி உள்ளாராம்.
கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் இருந்தே அதிரடியான ஆக்சன் கலந்த படங்களில் மட்டுமே நடித்து மக்களை கவர்ந்து வந்தார். ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட வில்லன் கதாபாத்திரத்தில் பெரிதாக நடித்தது இல்லை. ஒரு முறை ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது அதில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினாராம்.
அந்த படம் வேறு எந்த படமும் இல்லை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன முரட்டுக்காளை படம் தான். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முதலில் விஜயகாந்திடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அந்த சமயம் விஜயகாந்த் பட வாய்ப்புகளே இல்லை என்பதால் இந்த படத்தில் நடிக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் விஜயகாந்தை சந்தித்து படத்தை பற்றி பேசிவிட்டு சம்பளமாக உங்களுக்கு 1 லட்சம் தருகிறோம். அதற்கான அட்வான்ஸ் தொகையாக 25,000 இப்போது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம். உடனடியாக விஜயகாந்தும் சம்மதம் தெரிவித்துவிட்டு வாங்கினாராம்.
இந்த தகவல் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ராவுத்தருக்கு தெரிய வந்துவிட்டதாம். உடனடியாக ராவுத்தர் விஜயகாந்திற்கு கால் செய்து எதற்காக நீ முரட்டுக்காளை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாய் நீ நடித்தால் ஒரு படத்தில் ஹீரோவாக தான் நடிக்கவேண்டும். அது தான் சரியாக இருக்கும். இந்த படத்தில் நீ வில்லனாக நடித்தால் அடுத்ததாக உனக்கு வரும் பட வாய்ப்புகள் எல்லாம் வில்லன் கதாபாத்திரமாக வரும். முதலில், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு வா என்று கூறிவிட்டாராம். உடனடியாக விஜயகாந்தும் கொடுத்துவிட்டு படத்தில் நடிக்கவில்லை என்று விலகிவிட்டாராம். இந்த தகவலை மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…