லியோ கொடுத்த பெரிய வெற்றி! மடோனாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்?

madonna sebastian in leo

பிரேமம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மலையாள சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாகவே வளர்ந்து விட்டார் என்றே கூறலாம். பிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத்தில் மட்டுமின்றி அவருக்கு தமிழில் கூட மார்க்கெட் உயர்ந்தது.

இதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்திருந்தார்.  அதைப்போல தனுஷிற்கு ஜோடியாக பவர் பாண்டி படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

இதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ  திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக எலிசா எனும்  கதாபாத்திரத்தில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது. லியோ  திரைப்படத்திலிருந்து அவர் அருமையாக நடித்து கொடுத்து கலக்கியிருந்தார் என்று கூறலாம். அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மடோனாவுக்கு தமிழில் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, அவர் அடுத்ததாக நடிகரும், நடன இயக்குனருமான  பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

நா ரெடி தான் பாடலுக்கு ஏஜென்ட் டினாவுடன் குத்தாட்டம் போடும் மடோனா! வைரலாகும் வீடியோ!

அந்த திரைப்படத்தினை இதற்கு முன்பு பிரபு தேவாவை வைத்து சார்லி சாப்ளின் (2002) மற்றும் சார்லி சாப்ளின் 2 (2019) ஆகிய படங்களை இயக்கிய  இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் தான் நடிகை மடோனா பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கண்டிப்பாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டால் மடோனாவுக்கு நல்ல கதாபாத்திரமாக தான் இருக்கும் எனவே, இந்த படத்திற்கு பிறகும் மடோனாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஒரு படம் அதைப்போல மேலும் 2 படங்களில் நடிக்க மடோனா கதை கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்