நீண்ட கால இடைவேளைக்கு பிறகு தமிழில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த பாடகியாகவும்,புகழ் பெற்ற நடிகையாகவும் வலம் வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தார்.
இவர் கோலிவுட் சினிமாவில் “7 ஆம் அறிவு “எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் இவர் நீண்ட வருடங்களாக எந்த படத்திலும் நடிக்க வில்லை. இவர் மியூசிக்கில் ஆர்வம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது “பேராண்மை” படத்தை இயக்கிய ஜெகநாதன் இயக்கிய ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.