9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ‘ரீ-என்ட்ரி’ கொடுக்கும் மீரா ஜாஸ்மின்.!
சண்டைக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மீரா ஜாஸ்மீன் கடைசியாக தமிழ் சினிமாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான “விங்கியானி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மலையாள சினிமாவிற்கு சென்றுவிட்டார்.
மலையாளத்தில் ஒண்ணும் மிண்டாதே, இத்தினுமப்புரம், பத்து கல்பனங்கள், பூமரம், மகள் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். ஆனால், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் 40 வயதாகியும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வெளியீட்டு வந்தார்.
இந்த நிலையில், அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் விமானம் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.
இந்த படத்தை யார் இயக்கப்போகிறார் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீரா ஜாஸ்மீன் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்.