18 ஆண்டுகளுக்கு பிறகு எனது வழிகாட்டி இதை கூறுகிறார்.! சூர்யா நெகிழ்ச்சி பதிவு.!

Default Image

நடிகர் சூர்யா மற்றும், இயக்குனர் பாலா கூட்டணியில், வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இவர்களது கூட்டணி அடுத்ததாக எப்போது இணையும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இவர்களது காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில், பாலாவுடன் தான் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தார். ஆனால் இசையமைப்பாளர் நடிகை யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில். தற்போது அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இணைந்த இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 41 – என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சூர்யாவின் 2 D நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் இசையமைப்பதாகவும், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் கன்னியாகுமாரியில் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாலாவுடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா இணைவதால் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில் ” எனது வழிகாட்டியான இயக்குனர் பாலா ஆக்சன் சொல்வதற்காகக் காத்திருந்தேன்… 18 வருடங்களுக்குப் பிறகு இன்று நடந்துள்ளது மகிழ்ச்சி…உங்களுடைய எல்லா விருப்பங்களும் எங்களுக்கு தேவை” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்