17 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் திரைக்கு வரும் ரஜினி – கமல் படங்கள்!
கமல் ஹாசனின் ஆளவந்தான் (2001) மற்றும் ரஜினிகாந்தின் முத்து (1995) ஆகிய படங்கள் டிசம்பர் 8 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர். டிசம்பர் 8ம் தேதி ரஜினிகாந்தின் ‘முத்து’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இதனால், ரஜினி – கமல் ரசிகர்களுக்கு அந்த நாள் கொண்டாட்டமாக அமைய போகிறது. இதற்கு முன் 2005ம் ஆண்டில் ‘சந்திரமுகி’ மற்றும் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம், ஒரே ஸ்டுடியோவில் திரையுலகில் மிக நெருங்கிய நண்பர்களான ரஜினி – கமல் ஆகியோரின் இந்தியன்-2 மற்றும் தலைவர்170 ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சந்தித்துக்கொண்டு அன்பை பகிர்ந்து கொண்டார்கள்.
முத்து
1995 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘முத்து’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஆல் டைம் பிளாக்பஸ்டராக மாறியது. இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதா ரவி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
Rajinikanth : அச்சு அசலாக ரஜினிகாந்த் போல் இருக்கும் நபர்! வைரலாகும் புகைப்படம்!
இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் வெளியானது. மேலும் இந்த மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஜப்பானிலும் இப்படம் ரசிகர்களை கவர்ந்து, ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் மாறியது.
ஆளவந்தான்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவருடைய நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘ஆளவந்தான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி இருப்பார்.
வெல்லுவான் புகழ் அள்ளுவான்…அகிலமெங்கும் ‘1000’ திரையரங்கில் வெளியாகும் ‘ஆளவந்தான்’.!
ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, அனு ஹாசன், மிலிந்த் குணாஜி, கிடு கித்வானி, ஸ்ரீவல்லப் வியாஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். அந்த சமயம் இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக லாபத்தை ஈட்ட வில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு ஹிட்டானது.