தன்னை பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினார்.
இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் இந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைனில் மூலம் நடிகர் கருணாஸ் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து தனது வக்கீல் நோட்டீஸில், தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, 24 மணி நேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவதூறு பேச்சு! ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார்!
இந்த அவதூறு பேசிய விவகாரத்தால், நான்கு நாட்கள் மன உளைச்சலால் பாதிக்கபட்டுள்ளேன். இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் கேட்டுக்ண்டுள்ளார். தற்பொழுது, ஏ.வி. ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் சிவில் நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் மூலம் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…