உடல்நலக்குறைவால் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி.!
தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.
தன்னை எவ்வளவு கிடைத்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள கூடிய ஒரு நல்ல மனிதர் டி.ராஜேந்தர். எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
கடந்த நான்கு நாட்களாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம். ஆனாலும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு தனது தந்தயை சிங்கப்பூர் அழைத்து செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து நல்லபடியாக டி. ராஜேந்தர் திரும்பி வரவேண்டும் என ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.