பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதற்கு அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது. தற்போது அந்த படத்தில் தான் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- அதை கழட்டி நடிக்க சொன்ன படத்திலிருந்து விலகிடுவேன்… அடம் பிடிக்கும் சீரியல் சீட்டு.!
தொடர்ந்து பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால், அதிதி ஷங்கர் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இதற்கிடையில், அதிதி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில், ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது அது என்னவென்றால், நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக இயக்குனர் விஸ்னு வரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என ஹிட் படங்களை கொடுத்த விஸ்னு வரதன் அடுத்ததாக அதிதி ஷங்கரை வைத்து படம் இயக்கவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…