சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.!

Published by
பால முருகன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மாவீரன்”. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் டீஸருடன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த  வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இதனையடுத்து, இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன்- 4 மாசத்துக்கு ஒரே படம் தான்.! நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.?

அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் படமே கார்த்தியுடன், இரண்டாவது படம் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், அதிதி ஷங்கர் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். விரைவில் மாவீரன் படத்தின் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

10 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

18 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

27 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

35 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

42 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

16 hours ago